Saturday 10 March 2012

காஜல் அகர்வால் புத்தம் புதிய புகைப்படங்கள்





இது தாண்டி சினிமா - அத்தியாயம் 6



அதென்ன பாலிவுட் கலாச்சாரம்?
பாலிவுட் நட்சத்திரங்கள் ஹோட்டல் பார்ட்டியை பெரிய அளவில் விரும்புவதில்லை. தங்கள் சுய சுதந்திரம் ஹோட்டல் பார்ட்டிகளால் பறிபோவதாக கவலைப்படும் அவர்கள் நெருக்கமான பார்ட்டிகளை வீடுகளில் தான் வைத்துக்கொள்வார்கள். அப்போதுதான் அதிக கூட்டம் வராது என்பது அவர்கள் சொல்லும் காரணம் என்றாலும் ஹீரோக்களுக்கே உரிய ஆணாதிக்கமும் அதில் உண்டு. அதாவது சம்பந்தப்பட்ட நடிகையின் வீட்டுக்கே போய் அந்த நடிகையின் குடும்பத்தினர் முன்னாலே நடிகையுட்ன் கொஞ்சிக்குலாவும் ஒருவித மாப்பிள்ளை முறுக்குதான்.
எல்லா நடிகைகளுமே தங்கள் வீட்டில் விரும்பும் ஹீரோக்களுக்கு பார்ட்டி கொடுத்தே ஆகவேண்டும். சில சமயம் இந்த ஹோம்லி மப்பாட்டம் வில்லங்கத்தையும் ஏற்படுத்திவிடும். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம்.....
கோலிவுட்டில் இளைய நடிகரோடு ஜோடி போட்ட ஃப்ரியங்கா சோப்ரா இப்போது பாலிவுட்டில் உச்ச நாயகிகளுள் ஒருவர். அவர் தன் வீட்டில் இந்த கசாமுசா காக்டெயில் அடிக்கடி நடத்துவார். அப்படி சமீபத்தில் ஒரு பார்ட்டி கொடுத்தார். அதில் பாலிவுட்டின் முக்கிய புள்ளிகளெல்லாம் கலந்து கொண்டார்கள். இரவில் ஆரம்பிக்கிற குடியும், கூத்தும், விடிகாலை வரை கூச்சலாக... முனகலாக முடியும். விடிய விடிய ஊத்து. விடிஞ்ச பின்னாடி போர்த்து... என்கிற மாதிரி ராத்திரியெல்லாம் கூத்து நடத்திவிட்டு காலியில் தான் படுக்கப் போவார்கள். மத்தியானத்துக்கு மேல் எழுந்து தொழிலை பார்க்கப் போவார்கள். அப்படித்தான் அன்றும் ஃப்ரியா யங்கா சூப்பரா தன் வீட்டில் பார்ட்டியை தொடங்கிவைத்தார் நடிகை.
ஃபுல் மப்பில், ஃபுல் மியூஸிக் போட்டு ஆட... அந்த அடுக்குமாடியே ’ஒனக்கே இது அடுக்குமாடி?’ என கொந்தளித்துவிட்டது. அதிகாலைவரை போட்ட கெட்ட ஆட்டத்தால், உல்லாச கூச்சலால், வாலிப அன்பர்களால் சும்மா இருக்கமுடியாமல் சுகமான நெளிச்சல் நெளிந்தார்கள். வயோதிக அன்பர்களோ தூங்க முடியாமல் திண்டாடினார்கள். கடைசியில் பொறுமையிழந்த அக்கம் பக்கத்தார்... அந்த நடிகை வீட்டு கதவைத்தட்டி எச்சரிக்க.... அப்புறமும் அடங்கவில்லை. தகவல் போலீஸுக்குப் போனது. போலீஸ் சத்தம் கேட்டதும் ஆங்காங்கே ஓடிப்போய் பதுங்கினார்கள். அந்த நடிகை மீது வழக்குத் தொடர்ந்து அபராதம் விதித்தார்கள். இப்படி கூச்சலும் குழப்பமும் நிறைந்த... ஹோம் விருந்துதான் பாலிவுட் பார்ட்டி கலாச்சாரம்.
அப்பாவை ஷுட்டிங்கிற்கு வரவேண்டாம் எனச் சொன்னதற்கே பெரும் சிக்கலாகிவிட்டது சுட்டும் விழிச் சுடருக்கு. ஆனால் அவரிடம் ஹோம் பார்ட்டி மேட்டரைச் சொன்னதும் தண்ணி போடாமலேயே ஆடித்திர்த்துவிட்டர்.
‘பாலிவுட்டில் இதெல்லாம் சகஜமாம். இப்படி ஹோம் பார்ட்டி வைத்தால்தான் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்குமாம்...’ எனச் சொல்ல... ‘கோலிவுட் வாவாங்குது. பேசாமா அங்கேயே போயிடலாம். மூட்டயக்கட்டு’ என கொதித்துவிட்டார் அப்பாக்காரர்.
அப்பாவின் எதிர்ப்பை மீறியும் தனிக்குடித்தனம் போகவைத்தது ஹீரோக்களின் டார்ச்சர்.
‘நாங்க இருக்க வீடு 20வது மாடி. பட ஒப்பந்தத்திற்காக வர்றவ்ங்க ரொம்ப சிரமப்படுறதால்... தனி வீடு பாத்திருக்கேன்’ என சுடர் விளக்கம் சொன்னாலும் கிட்டத்தட்ட இது குடும்பத்தை பிரித்தது போலத்தானே.
தனி வீட்டில் பால் காய்ச்சுனாரோ... பீர் காய்ச்சினாரோ.... அதை விடுவோம்! அடுத்த சங்கதிக்கு வருவோம்.
அடுத்த சங்கதி..... ரொம்ப கொடுமை
( அடுத்த ஸீன்...)

பத்து நாள் விஷாலுக்கு... பத்து நாள் என்டிஆருக்கு - த்ரிஷாவின் மேனேஜ்மென்ட்!



த்ரிஷாவுக்குப் படங்களே இல்லை என்று ஒரு பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதோ கல்யாணம் என்கிறார்கள்.
ஆனால் இரண்டையுமே வெற்றிகரமாகப் பொய்யாக்கி வருகிறார்.

இப்போது அவர் இரண்டு பெரிய படங்களில் படு பிஸி. ஒரு படம் தெலுங்கில். ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக.

இன்னொரு படம் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக. படத்தின் பெயர் சமரன்.

இரண்டு படங்களும் வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. எப்படி சமாளிக்கிறார்?

இதுபற்றி த்ரிஷா கூறுகையில், "அது ரொம்ப சிம்பிள்... பத்து நாட்கள் விஷாலுடன் தமிழ் படத்திலும் பத்து நாட்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படத்திலும் மாறி மாறி நடித்துக் கொடுக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு மேல் நடிக்கிறேன். இப்போது வரைக்கும் என் அழகு குறையவே இல்லை என்று பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

காரணம், அழகை எப்படி பாதுகாக்கவேண்டும் என்ற ரகசியம் எனக்கு தெரியும். அதற்காக நிறைய கஷ்டப்படுகிறேன்.

அதே நேரம் மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை. சினிமா தவிர பொது நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் இல்லாமல் செல்லவே பிடிக்கிறது," என்றார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி













நமிதாவின் புத்தம் புதிய புகைப்படங்கள்










Monday 27 February 2012

விஜய்யின் சொந்தப் படத்தில் விக்ரம் சொல்லியடிக்கும் கில்லி பிலிம்ஸ்

அப்பா காட்டிய வழியில்தான் அசால்ட்டாக நடந்து கொண்டிருக்கிறார் விஜய். தந்தை சொந்தப்படம் எடுக்கும் போதெல்லாம் சற்றே நொந்து போவது அதே விஜய்தான். அந்த படம் ஓடவில்லை என்றால் கூட, விஜய் படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்த துடிப்பார்கள் விநியோகஸ்தர்கள். அதற்காகாகவே அப்பாவை நொந்து கொள்வாராம் விஜய். ஏம்ப்பா உங்களுக்கு இந்த வேலை? பேசாம வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே? இப்படி தன்னிடம் விஜய் கேட்டதாக பல முறை எஸ்.ஏ.சி கூறியிருக்கிறார். சொந்தப்பட விஷயத்தில் அப்பாவிடம் நொந்து கொண்ட அதே விஜய் இப்போது சொந்தமாக படமெடுக்கப் போகிறாராம். ஏன் இந்த திடீர் முடிவு? எல்லாம் ஒரு இன்ட்ரஸ்ட்தான். அதுவும் அப்பா இயக்கிய படத்தை அவரே ரீமேக் செய்யப் போகிறார் என்பதுதான் இதில் மேலும் சுவாரஸ்யம். எஸ்.ஏ.சி இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் சட்டம் ஒரு இருட்டறை. அப்படத்தின் மூலம் பெற்ற வெற்றியை வைத்துக் கொண்டுதான் தமிழ் சினிமாவில் வலுவான அஸ்திவாரம் போட்டார் விஜயகாந்த். அதே கதையை மறுபடியும் ரீமேக் செய்யப் போவதாகவும் அதில் விஜய் நடிக்கப் போவதாகவும் பல முறை செய்திகள் கசிந்திருக்கின்றன. அப்போதெல்லாம் மவுனம் காத்த விஜய், இப்போது அப்படத்தை ரீமேக் செய்ய துடிக்கிறார். ஆனால் இப்படத்தில் நடிக்கப் போவது விஜய் அல்ல. விக்ரம். (இவர் சீயான் விக்ரம் அல்ல, இளைய திலகம் பிரபுவின் செல்ல மகன்) கும்கி படத்தையடுத்து இந்த படத்தில்தான் நடிக்கப் போகிறார் விக்ரம் பிரபு. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு கில்லி பிலிம்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார் விஜய்.

Sunday 26 February 2012


My Facebook Login Page

Saturday 25 February 2012

விஜய்யை வளர்க்க என் வீட்டையே விற்றேன்... டைரக்டர் எஸ்.ஏ.சி ஆவேசம்


களைகட்டி வரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை அறிய இன்னும் ஒரே ஒரு நாள் காத்திருந்தால் போதும். அதற்குள் யார் சட்டையும் கிழியாமலிருக்க ஆண்டவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை. இரு தரப்பும் ஒருவர் மீது மற்றவர் சுமத்திக் கொள்ளும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆக்ரோஷத்திற்கும் அளவே இல்லை. எல்லா தயாரிப்பாளர்களுக்கும் அரை கிரவுண்ட் நிலம் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார் எஸ்.ஏ.சி. 
vijay 
இது குறித்து கருத்து தெரிவிக்கும் கேயார், அப்படி கொடுத்தால் சுமார் 25 கோடியாவது தேவைப்படும். சங்கத்தில் இருப்பது ஒரு கோடிதான். மீதமுள்ள பணத்திற்கு விஜய் மூன்று படங்களுக்கு சம்பளம் வாங்காமல் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கால்ஷீட் கொடுத்தால்தான் முடியும் என்கிறார். 

அடிக்கடி விஜய்யையும் இந்த விஷயத்தில் இழுப்பதால் பெரும் கோபத்திற்கு உள்ளாகியிருக்கும் எஸ்.ஏ.சி நறுக்கென்று ஒரு பதிலையும் சொல்கிறார்.
விஜய் விஜய்ன்னு சொல்றாங்க. அவரை நான் ஒண்ணும் சும்மா சாதாரணமாக சினிமாவுக்குள் கொண்டு வந்து விடல. எத்தனை நிலத்தை விற்றிருப்பேன், எத்தனை வீடுகளை விற்றிருப்பேன் என்று எனக்குதான் தெரியும். நான் தேர்தலில் நிற்கிறேன்னா என்னை பற்றி மட்டும்தான் பேச வேண்டும். 

விஜய் இப்போதான் சினிமாவுக்கு வந்தார். நான் முப்பந்தைந்து வருஷமா சினிமாவில் இருக்கேன். எந்த விநியோகஸ்தரையும் ஏமாற்றியதில்லை. எந்த டெக்னிஷியனுக்கும் சம்பள பாக்கி வைத்ததில்லை. இந்த தேர்தலில் தகுதியோடதான் நிற்கிறேன். நேரடியாக என்னுடன் மோதுவதை விட்டுட்டு என் மகன் விஜய்யை இதில் இழுப்பது கொஞ்சம் கூட சரியில்லை என்றார் ஆவேசமாக. 

இதற்கிடையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த எஸ்.ஏ.சி தனது தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். திருச்சி இடைத் தேர்தலிலும் விஜய் ரசிகர்கள் அதிமுக வின் வெற்றிக்கு பாடு பட வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

நன்றி தமிழ்சினிமா.காம்

வசதியா வாழத்தான் சினிமாவிற்கு வந்தேன்; கலைச்சேவை செய்ய இல்ல..!!




டுத்த அதிரடிக்கு அஜீத் ரெடி! ''பில்லா- 2 பத்திப் பேசலாம் பாஸ்!'' என்றவரிடம் ''எல்லாம் பேசலாமே!'' என்றதும் ''ஓ...யெஸ்!'' என்று தோள் தட்டுகிறார். 

 ''ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?'' 

''ஒரு வருஷத்துக்கு ஒரு படம் பண்ணா  போதும்னு நினைக்கிறேன் நான்.  வெற்றியோ, தோல்வியோ இந்த முடிவைப் பாதிக்காம பார்த்துக்குறேன். 'மங்காத்தா’ பெரிய ஹிட் அடிச்சதாலேயே அஜீத் ரெண்டு மாசத்துக்கு ஒரு படம் பண்ணணும்கிற தேவை இல்லை. எனக்கான படங்கள் நிச்சயமா என்னைத் தேடி வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் அதைச் சாப்பிடுறவனோட பெயர் எழுதப்பட்டு இருக்கும்கிறதை நம்புறவன் நான்!''

''ரசிகர் மன்றங்களைக் கலைச்சதுக்கு அப்புறம் ரசிகர்களுடனான உறவு எப்படி இருக்கு?'' 


''எப்போதும் போல், ரசிகர்கள் மனசுல நான் இருக்கேன். என் மனசுல அவங்க இருக்காங்க. இதுல எனக்கோ, என் ரசிகர்களுக்கோ எந்தக் குழப்பமும்  இல்லை!'' 

''எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜீத்... இதுவரை ஓ.கே! ஆனா, இப்போ யார் சூப்பர் ஸ்டார்?''

''சூப்பர் ஸ்டார்னா என் மனசுல எப்பவும் இருக்குறது ரஜினி சார்தான். அடுத்ததா அந்த நாற்காலியில யாரை வேணாலும் அமரவெச்சு பார்க்குற, ரசிக்கிற உரிமை மக்களுக்கு இருக்கு. அவர்களின் ரசனைக்குள் தலையிட்டு கருத்துச் சொல்ல நான் விரும்பலை. ரோட்ல போகும்போது ரெண்டு பக்கமும் பார்த்துக் கிட்டே போனா, கவனம் சிதறிடும். நாம போக வேண்டிய பாதை மாறிடும். என்னைப் பொறுத்த அளவில் என் பாதையில நான் போய்க்கிட்டு இருக்கேன். அந்தப் பாதை எங்கே போகுதோ, அங்கே நான் இருப்பேன். மற்றவங்களைப் பத்திப் பேச நான் விரும்பலை!''

''அப்ப அஜீத்தோட பாதை அரசியலுக்குப் போகுமா?''

''நாலு காசு சம்பாதிக்க, பொழைக்கத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆமாம், நான் சுயநலவாதிதான். கார், பங்களான்னு வசதியா வாழ்றதுக்குப் பணம் தேவை. அதுக்காக மட்டும்தான் சினிமாவுக்கு வந்தேன். மத்தபடி கலைச் சேவையாற்ற வந்தேன்னு எல்லாம் சொன்னா, அது பெரிய பொய். நடிப்பு மூலமா மக்களுக்கு அறிவுரை சொல்ற தகுதி எல்லாம் எனக்கு இல்லை. ஏன்னா, மக்கள் அதிபுத்திசாலிகள். எல்லா விஷயத்துலயும் தெளிவா இருக்காங்க. படம் நல்லா இருந்து பாராட்டுனா, சந்தோஷம். தப்பா இருந்து திட்டுனா, வருத்தப் பட மாட்டேன். அந்தத் தப்பை சரிசெஞ்சுக்க முயற்சிப்பேன். அவ்வளவு தான்!''

''அப்போ அஜீத் நிச்சயமா அரசியலுக்கு வர மாட்டார்னு எழுதிக்கலாமா?''

'' 'To many cooks spoil the Broth’ -னு ஒரு பழமொழி இருக்கு. சமையல் அறையில ஒருத்தர், ரெண்டு பேர் சேர்ந்து சமைச்சா சாப்பாடு ருசியா இருக்கும். அதுவே பத்துப் பேர் கும்பலாச் சேர்ந்து சமைச்சா, அந்தச் சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்காது. ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன். எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!''

நிஜமாவே அஜித் GREAT தான்..!!!


இலங்கையை ஆண்ட ராவணனுக்கு இருந்திருக்கலாம் பவர்ஃபுல்லான பத்து தலை! ஆனா... தமிழ் இதயங்களை தன்னைச்சுத்தி சுத்தவைக்கிற ‘சூப்பர் பவர்’ கொண்டவர்தான் நம்ம ‘ஒத்த தலை’!

வானத்துல வந்து எந்த வால்நட்சத்திரமும் வழிகாட்டலை. ஆனாலும் ஒருதேவகுமாரனா உதிச்சாரு! தலைக்கு பின்னால எந்த ஒளிவட்டமும் கிடையாது. என்றாலும் தனியா நின்னு முத்திரை பதிச்சாரு! அவர்தான் அஜித். மே 1ம் தேதி உழைப்பாளர் தினம். இந்த நாள்ல பிறந்த அஜித்துக்கு உழைக்கிற வர்க்கத்தின்மேல ‘பிறவிப்பாசம்’ இயல்பிலேயே இருக்கும்தானே. அந்த பாசத்தை அஜித் சத்தமா சொன்னப்போ பெரிய யுத்தமே நடந்துச்சு.

அது 1997. தமிழ்சினிமாத் துறைல திரைப்பட தொழிலாளிகளுக்கும் (ஃபெப்ஸி), படைப்பாளிகளுக்கும் பங்காளித் தகராறு நடந்த சமயம். கமலும், அஜித்தும் மட்டுமே ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தாங்க. அதனால படைப்பாளிகள்லாம் ஒண்ணா சேர்ந்து அஜித்துக்கு ‘ரெட் கார்டு’ (படங்களில் நடிக்க தடை) போடுற ரேஞ்ச்சுக்கு பாய்ஞ்சு மிரட்டினாங்க. அந்த பரபரப்பான சிச்சுவேஷன்லதான் அஜித்தை நான் முதல்முறையா நேடியா சந்திச்சேன். ‘குங்குமம்’ பத்திரிகைல சப்-எடிட்டராக நானிருந்த காலமது. தி.நகர் சில்வர்பார்க் அபார்ட்மென்ட்ல இருந்த ஆபீஸ§க்கு வரச்சொன்னாரு.

அஜித்தின் குரல்வளையை நெரிக்கற அந்த நேரத்துல அவருக்கு ஆதரவா உழைப்பாளிகளோட குரல் தவிர, அப்போதைய சினிமா புள்ளிகள் ஒரு விரல்கூட நீட்டலை. அதனால கொஞ்சம் டென்ஷனா இருந்தாரு அஜித். ‘‘மனசு திறந்து பேசுங்க சார்! உங்க தரப்பு உண்மைகளை ‘குங்குமம்’ மூலமா உலகத்துக்கு சொல்லுங்க’’ன்னேன். முதல் சந்திப்பு. ஆனா முழு நம்பிக்கையோட என்கிட்ட கலப்படமில்லாம பேசுனாரு.

அந்த பிரச்னை பத்தி ‘அக்குவேறு சுக்குநூறா’ பத்திபத்தியா எழுதி அப்போதைய‘குங்குமம்’ தலைமை நிர்வாகியான எங்கள் மதிப்புக்குரிய தயாநிதி மாறன் அவர்களின் (எடிட்டோரியல்ல செல்லமா ‘சின்ன எம்டி.’னு சொல்லுவோம்!) பார்வைக்கு வெச்சேன். புயல்வேகத்துல படிச்ச ‘சின்ன எம்.டி.’ அவர்கள் ‘‘உதய், அஜித் சொல்ற அத்தனையும் எக்ஸ்க்ளுசிவ்தானே?’’ன்னார். ‘‘சத்தியம் சார்’’னேன். ‘‘அப்படியே கவர்ஸ்டோரிக்கு அனுப்பிடு!’’ன்னார் அதிரடியா.

ஆனா அஜித்தோட பேட்டியை ஆஃப் பண்ணனும்னு சம்பந்தப்பட்ட டாப் படைப்பாளிகள் ‘ஆஃப் தி ரெக்கார்டர்’ ஆபீஸ§க்கு வந்தெல்லாம் ட்ரை பண்ணாங்க. ஆனா நம்ம ‘சின்ன எம்.டி.’ அவர்களிடம் இந்த ‘பாச்சா’ல்லாம் பலிக்கலை. இதுக்கிடையில் அஜித்கிட்டயும் யாரோ சிலர் ‘‘குங்குமத்துல உங்க பேட்டி உங்களுக்கு எதிராவே கான்ட்ரவர்ஸியா வரப்போகுது. உடனே பேட்டியை வாபஸ் வாங்கிடுங்க’’னு பத்தவெச்சிருக்காங்க. அஜித்கிட்டேர்ந்து என் பேஜருக்கு மெசேஜ் வந்தது. விஷயத்தைச் சொல்லி சிரிச்சவர், ‘‘நான் உங்களை முழுசா நம்பறேன் சார்!’’னு மட்டுமே சொன்னார்.

‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ அல்லவா? ஃபெப்ஸி, படைப்பாளி யுத்தத்துல ஒத்தை ஆளா நின்ன அஜித்துக்கு சினிமா உலகில் அவர் ஒரு நல்ல ‘சிட்டிசன்’ங்கிற ‘முகவரி’க்கு ‘அசல்’ ‘வரலாறு’ அந்த பேட்டி! கவர்ஸ்டோரியை படிச்சுட்டு அஜித் என்கிட்ட சொன்னாரு... ‘‘இந்த மாதிரி துணிச்சலா தோள் குடுக்க நாலு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா போதும் சார், நான் நெனச்சது சாதிச்சிருவேன்’’னார். ‘‘இந்த நம்பிக்கைக்கு நன்றி சார்’’னேன்.

அதேமாதிரி பத்திரிகையாளர்கள் அத்தனை பேர்கிட்டயும் அஜித் உரிமையா பழகறது பெருமையான விஷயம். அதுல எப்ப நினைச்சாலும் நெகிழ வைக்கற ஒரு சம்பவம் இது. அன்னிக்கு ‘தல’யோட பர்த்டே கொண்டாட்டம். ‘அ’ முதல் ‘அக்கு’ வரை பத்திரிகையாளர்களும், கோழி முதல் கொக்கு வரை படையல்களும், ஜூஸ் முதல் ‘கிக்கு’ வரை திரவங்களும் ‘இறக்கிகிட்டு’, அப்புறம் ‘ஏறிகிட்டு’ ஜாலி கிரிக்கெட்டு ‘ஆடிகிட்டிருந்தாங்க. ‘¢அப்போ பேச்சும் சிரிப்புமா ‘பேட்ச் பேட்ச்சா’ நின்னுருந்த நம்மாளுங்களை தேடிவந்து ‘வாய்ழ்த்துய்க்கய்ளை’ (குளறாம படிங்க) சந்தோசமா வாங்கிட்டிருந்தாரு அல்டிமேட் ஸ்டார். கூடவே திருமதி. ஷாலினியும் வர்றாங்க.

‘‘அச்சச்சோ, சிஸ்டர் வேற வர்றாங்களே’’னு எல்லாரோட உள்மனசும் எச்சரிக்க ‘கரீக்ட்டா பேஸ்னுமே’னு வார்த்தைகளை உச்சரிக்க ட்ரை பண்ணி ட்ரையல் பாத்திட்டிருந்தப்போ... அட! நம்ம பக்கத்துலயே வந்துட்டாங்க அல்டிமேட் தம்பதி. ‘‘தேவகுமாரனும், தேவதையும் எங்களை தேடிவந்து வாழ்த்தற மாதிரி இருக்கு! எங்க தல இன்னும் உச்சத்துக்கு வர வாழ்த்துக்கள்!’’னு தலய உச்சிகுளிர வாழ்த்தினோம். அப்போ நம்ம ஃப்ரெண்ட் பழைய பாசமலர் சிவாஜி ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டு ‘‘நீடுழி வாழ்க’’னு ஆசீர்வதிக்கறதுக்காக ரெண்டு கையையும் ஒருசேர தூக்க, அவர் வலது கையிலேர்ந்த ‘திரவ குவளை’ சட்னு வழுக்கி தரையில் ‘ச்சலீர்’னு உடைஞ்சு சிதற அத்தனை பேரும் பதறிட்டோம். கீழே விழுந்து தெறிச்ச ஒரு சின்ன கண்ணாடிச் சில்லு ஷாலினியின் கை மீது பட்டுவிட உடனே அஜீத் ‘‘நத்திங், இட்ஸ் ஓகே’’னு சொல்லிகிட்டே அந்த சில்லை கவனமா எடுத்துட்டு ஒரு பேரரை கூப்பிட்டார். ‘‘உடனே இந்த இடத்தை க்ளீன் பண்ணுங்க...’’னு சொல்லிட்டு, மாப்ளய பாத்து ‘‘பரவால்ல, கிளாஸ் உங்க கால்ல படாம பத்திரமா வாங்க’’னு சொல்லிட்டு அந்த ஸ்மைலோட அடுத்த க்ரூப்பை பாக்கப்போனார், நெஜம்மாவே நெகிழ்ந்து போயிட்டோம் நாங்க.

அஜித் மாதிரி யாராலையும் வர முடியாது...!



நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.


கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.

‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.
‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.

‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.

‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.

‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.

‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.

‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.

‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’

‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’

‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’
‘இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’

‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’
‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’

‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

‘அதெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’

‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

‘அது பெரிய விஷயமாப்பா?’

‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’
‘சாப்பாடு மட்டும்தானா?’

‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு…’

இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.
செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது

விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' திடீர் நிறுத்தம் : ஏ.ஆர். முருகதாஸ் அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் "துப்பாக்கி" என்ற படத்தை இயக்கி வந்தார்.

பெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பெப்சி, தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலியாக பல முக்கியப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ், தானாக முன்வந்து துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது விஜய் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் முருகதாஸ் பேசினாரா என்பது தெரியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் மகன் படமே படப்பிடிப்பைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெப்சி தொழிலாளர்களிடையே கேலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

துப்பாக்கியில் ஜெய் படப்பிடிப்பில் பரிதவிப்பு!!!!!!!!!!!!!!!!!!!!


கடல் மீனை பிடிச்சு வாய்காலில் விட்ட மாதிரி, திசை தப்பி திண்டாடிக்Vijay - Jaiகொண்டிருக்கிறார் ஜெய். சுப்ரமணியபுரம் என்ற ஒரே ஒரு ஹிட்டுக்கு பின் தாறு மாறாக தாண்டவம் ஆடிய ஜெய்யை அப்படியே ஓரம் கட்டி ஆசுவாசப்பட்டுக் கொண்டது கோடம்பாக்கம். அவரும் நிலைமையை புரிந்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டதுடன், ஆகாயத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.
ஏகப்பட்ட இடைவெளிக்கு பின் எங்கேயும் எப்போதும் வந்தது. மறுபடியும் 'தாண்டவக்கோனே' ஆகிவிட்டார் ஜெய். போன் வந்தால் எடுப்பதில்லை. நேரில் கண்டால் சிரிப்பதில்லை என்று ஒரே கம்ப்ளைண்ட் உதவி இயக்குனர்கள் மத்தியிலும், தயாரிப்பாளர்கள் மத்தியிலும். சம்பளத்தையும் 'ஒன் சி' கேட்கலாமே என்று ஏற்றிவிட்டார்களாம் உடனிருந்த நண்பர்கள். அதற்கேற்றார் போல ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் ஜெய்.
இந்த நேரத்தில்தான் இன்னொரு சங்கடம் அவருக்கு. ஜெய்யை பொருத்தவரை மீட்பர், மேய்ப்பர் எல்லாமே முருகதாஸ்தான். ஏனென்றால் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் இவருக்கு வாய்ப்பு தந்ததே முருகதாஸ்தான். எனவே அவர் இயக்கி வரும் துப்பாக்கி படத்தில் 'ஒரு கேரக்டர் இருக்கு. நடிக்கணும்' என்றதும் கேள்வியே கேட்காமல் ஒப்புக் கொண்டார்.
விஜய் என்ற பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் ஜெய் என்ற சிறிய ஹீரோவுக்கு என்ன வேலை இருக்கும்? பதற்றத்தை எப்போதும் முகத்தில் தேக்கி வைத்தபடியே வேலை பார்க்கிறாராம் ஜெய். படப்பிடிப்பிலும் அவ்வப்போது எரிந்து விழுவதாக தகவல்.
துப்பாக்கியை பொருத்தவரை ஜெய்க்கு கெஸ்ட் ரோல்தான். ரசிகர்கள் யாரும் அஞ்சத் தேவையில்லை என்கிறார்கள் அவரது தரப்பில்.